சென்னையின் குன்றத்தூர் பகுதியில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அபிராமி என்ற பெண், தனது கள்ளக்காதலுக்காக தனது இரு குழந்தைகளை கொலை செய்த இந்த வழக்கு, மனித உறவுகளின் இருண்ட பக்கத்தையும், சமூக வலைதளங்களின் தாக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த அபிராமி ஒரு இல்லத்தரசி. அவரது கணவர் விஜய், தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அஜய் (7 வயது) மற்றும் கார்னிகா (4 வயது) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். அபிராமிக்கு, அவரது பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பணியாற்றிய சுந்தரம் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இந்த உறவு, அபிராமியின் கணவர் விஜய்க்கு தெரியவந்ததால், குடும்பத்தில் பெரும் பிரச்சினைகள் எழுந்தன. தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

மேலும் இந்த மோதல்கள் அபிராமியை தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டின. 2018 ஆகஸ்ட் 31 அன்று, விஜய் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், அபிராமி தனது குழந்தைகளான அஜய் மற்றும் கார்னிகாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். குழந்தைகள் தூங்கிய பிறகு, அவர் அவர்களது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இதையும் படிங்க: ராபர்ட் ப்ரூஸ் வெற்றிக்கு எதிர்ப்பு! நயினார் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை...
அபிராமியின் செல்போன் சிக்னலைப் பயன்படுத்தி, அவர் நாகர்கோவிலுக்கு தப்பியோடியதைக் கண்டறிந்தது. பின்னர், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அபிராமியும் சுந்தரமும் கைது செய்யப்பட்டனர். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.விசாரணையில், அபிராமி தனது கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அபிராமி குற்றவாளி என காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சுந்தரமும் குற்றவாளி என தீப்பளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தோஸ்த் முறையில சொன்னோம்! வேணாம்னா விடுங்க... திருமாவளவன் ஓபன் டாக்