சென்னையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு நான்கு நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நகரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பிரதான வழித்தடங்களில் வாகனங்கள் மெதுவாக நகர்வதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இன்று காலை முதலே நகரின் வெளியேறும் பாதைகளில் வாகன நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியது. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அதிகமாக இருந்ததால் சாலை முழுவதும் போக்குவரத்து மெதுவாக நகர்ந்தது. வழக்கமாக அரை மணி நேரத்தில் கடக்கும் தூரத்திற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஆகும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.அண்ணா சாலையிலும் இதேபோன்ற நிலைமை காணப்பட்டது.

நகரின் மையப்பகுதியிலிருந்து வெளியேறும் வாகனங்கள் அதிகரித்ததால் சிக்னல்களில் நீண்ட காத்திருப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்தகரை, போரூர் பகுதிகளில் வாகன நெரிசல் உச்சத்தை எட்டியது. மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளுக்குச் செல்லும் மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுத்ததால் சாலை முழுவதும் நெரிசல் ஏற்பட்டது.பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கமான நிகழ்வுதான்.
இதையும் படிங்க: தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!
ஆனால் இந்த முறை வார இறுதி நாட்களுடன் இணைந்து நான்கு நாள் தொடர் விடுமுறை கிடைத்ததால் பயணக்கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், குடும்பங்களுடன் செல்லும் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பயணத்தைத் தொடங்கியதால் சாலைகளில் அழுத்தம் அதிகரித்துள்ளது. போக்குவரத்துத் துறை இந்த நிலையை எதிர்பார்த்து சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம். கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்து பயணிகள் கூட்டத்தைக் கையாள முயற்சி செய்யப்படுகிறது. தற்காலிகப் பேருந்து நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: போதைப் பொருள் விஷயத்தில் தவெக நிர்வாகி..! மாரத்தான் ஓடி என்ன பயன்.? CM விஜய்க்கு TTV தினகரன் கண்டனம்..!!