இந்திய அரசியல் களத்தில், பல அரசியல்வாதிகள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை ஊழல், மோசடி, வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை உள்ளடக்கியவை. இத்தகைய வழக்குகள் நீதிமன்றங்களில் நீண்ட காலம் இழுபறியில் உள்ளன, இதனால் பதவியில் இருப்பவர்கள் தங்கள் பதவிகளைத் தொடர்ந்து வகிக்க முடிகிறது. இதற்கு தீர்வாக, பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக விசாரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் ஒரு சிறப்பு நீதிமன்ற அமைப்பு அல்லது சட்டத் திருத்தம் தேவை என்று உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கு ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகள் தண்டனை கிடைக்கக்கூடிய குற்றங்களில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதை இந்த மசோதா எடுத்துரைக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அமித்ஷா மசோதாவை வாசிக்க தொடங்கியது முதலில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அவரைப் பேசவிடாமல் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இந்த மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் கேமிங்! 3 வருஷம் ஜெயில்... ஒரு கோடி அபராதம்.. புதிய மசோதா தாக்கல்..!
ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கும் குற்ற வழக்குகளில் சிறை செல்லும் பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கும் வகையிலும்., சிறையில் இருக்கும் முதல்வர், அமைச்சர் 31 வது நாளில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையெனில் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் இந்த மசோதா எடுத்துரைக்கிறது. எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய எதிர்க்கட்சிகள் மசோதாவின் நகலை கிழித்து எரிந்து ஆவேசமாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: வாக்கிங் சென்ற காங். எம்.பிக்கு நேர்ந்த கொடூரம்.. கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!