பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு
9500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் கனமழை காரணமாக ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் வரத்தாலும் ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டில் திறந்து விடப்படும் உபரி நீர் வரத்தால் கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு உபரி நீர் வரத்து 8500 கன அடியிலிருந்து 10500 கன அடியாக அதிகரித்து வருகிறது.
கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் மதியம் 7500 கன அடியிலிருந்து 9500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 அடியில் தற்போது 33 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. 3231 மில்லியன் கன அடியில் 2521 மில்லியன் கன அடியில் நீர் இருப்பு உள்ளது.
இதையும் படிங்க: ஆபத்து! ஆபத்து!!... குமரி மக்களுக்கு அபாய மணி... திரும்பிய திசையெல்லாம் எச்சரிக்கை ....!
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் நம்பாக்கம்,கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம்,ஒதப்பை,நெய்வேலி, எறையூர்,வெள்ளியூர், பீமன் தோப்பு கொரக்கந் தண்டலம், சோமதேவன்பட்டு,மெய்யூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம் ஆத்தூர் பண்டிகாவனூர், ஜெகநாதபுரம், புது குப்பம், கன்னிப்பாளையம், வண்ணிப்பாக்கம், ஆசூவன் பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர்
சடையான்குப்பம், எண்ணூர் ஆகிய கிராமங்களுக்கு நீர்வளத்துறை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ துணி துவைக்கவோ செல்பி எடுத்து விளையாடவோ கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மேட்டூர் அணையில் நிகழ்ந்த திடீர் மாற்றம் - பெருக்கெடுத்து ஓடிவரும் வெள்ளம்... மக்களுக்கு திடீர் எச்சரிக்கை...!