வளிமண்டலத்தில் நிலவக்கூடிய சுழற்சி காரணமாக, தொடர்ந்து வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
அந்த அடிப்படையில், இன்றைய தினத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் வரும் நாட்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அக்டோபர் 26ஆம் தேதி வரையிலும் தமிழகப் பகுதிகளில் மழை பெய்வதற்கான சூழல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 16 மாவட்டங்களுக்கு குறி வைக்கும் கனமழை... இன்று எங்கெல்லாம் ருத்ரதாண்டவம் ஆடப்போகிறது தெரியுமா?
அந்த அடிப்படையில், தற்போது முதற்கட்டமாகத் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தொடர்ந்து, இது தமிழகப் பகுதிகளில் மழைப்பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு தொடர்ந்து நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இத்தனை சென்டி மீட்டரா?... சென்னையை உக்கிரமாக தாக்கிய கனமழை... விடிய, விடிய கொட்டித்தீர்த்த அளவு இதோ...!