மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீட்டு விழாக்களில் தனது சமையல் கலையால் புகழ் பெற்றவர் ரங்கராஜ். 2019-ல் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், பின்னர் பென்குயின் போன்ற படங்களிலும் நடித்தார்.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றி, மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார். இந்தச் சூழலில், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்து, சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்தார். இந்தப் புகைப்படங்களில், ரங்கராஜ் ஜாய்க்கு குங்குமம் இடுவது மற்றும் இருவரும் மாலை அணிந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தத் திருமணம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், அவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தபோது, ஜாய் கிரிஸில்டா 2025 ஆகஸ்ட் 29 அன்று சென்னை காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார். அவரது புகாரில், ரங்கராஜ் தன்னை சென்னையில் உள்ள எம்.ஆர்.சி. நகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறினார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ரங்கராஜ் தன்னுடன் தொடர்பை முற்றிலும் துண்டித்து விட்டதாகவும், தான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரை சந்திக்க முயன்றபோது இரண்டு முறை தாக்கப்பட்டதாகவும் ஜாய் குற்றம் சாட்டினார். மேலும், ரங்கராஜ் தனது கருவை கலைக்குமாறு கூறியதாகவும், தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஓய் பொண்டாட்டி”… மாதம்பட்டி ரங்கராஜின் அலப்பறைகள்! புதிய வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிசில்டா
இது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான வீடியோக்கள் ஆகியவற்றை ஜாய் கிரிஸல்டா பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவதூறாக ஜாய் கிரிசில்டா பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் வலியுறுத்தினார். இதனிடையே ரங்கராஜ் உடனான தகராறில் அவர் பார்ட்னராக உள்ள மாதம்பட்டி பகாசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேசியதாக நிறுவனம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம்பட்டி பகாசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிசில்டா பேசியதால் 15 நாளில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாதம்பட்டி என்று குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது என ஜாய் கிரிசில்டா விளக்கம் அளித்தார். மேலும், இவ்விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறும் நிறுவனம் மாதம்பட்டி ரங்கராஜை பாதுகாப்பதாக ஜாய் கிரிசில்டா சாடியுள்ளார்.
இதையும் படிங்க: சும்மா சும்மா நோண்டாதீங்க... நீதிமன்றத்தை நாடிய விஜய் தரப்பு!