• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி... நீதிமன்றம் அதிரடி..!!

    மடப்புரம் அஜித் கொலை வழக்கில் ஓட்டுணரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    Author By Nila Fri, 28 Aug 2026 17:52:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madapuram ajith case

    மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தமிழகத்தின் சமூக மனசாட்சியை உலுக்கிய ஒரு காவல் மரண சம்பவமாக தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரின் உயிரிழப்பு, வெறும் ஒரு விசாரணை என்ற பெயரில் நடந்த கொடூரத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நிகிதா என்ற பெண் அளித்த நகை திருட்டு புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மறுநாளான ஜூன் 28ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

    உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், மிருகத்தனமான தாக்குதல் நடந்ததும் பின்னர் வெளிவர, இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் உள்ளூர் காவல்துறை விசாரணை நடத்தினாலும், பொதுமக்களின் கோபமும் நீதிமன்றங்களின் தலையீடும் காரணமாக வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் அஜித்குமாரின் மரணம் தெளிவான காவல் மரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு, அவரை விசாரணைக்கு இழுத்த நகை திருட்டு புகாரில் எந்த ஆதாரமும் இல்லை என்றும், அந்த வழக்கு மூடப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    Ajith

    இதனால் ஒரு அப்பாவி இளைஞர் வெறும் சந்தேகத்தின் பெயரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற உண்மை மேலும் தெளிவானது. இந்த வழக்கில் முதற்கட்டமாக தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் தனிப்படை போலீஸ் வாகன ஓட்டுநராக இருந்த ராமச்சந்திரன் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் அஜித்குமாரை அழைத்துச் சென்ற வாகனத்தை ஓட்டியவர் என்றும், சம்பவத்தன்று பணியில் இருந்தவர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது.

    இதையும் படிங்க: "ஆஜராகிறேன்"..! இளவரசரா என்று விளாசிய கோர்ட்..! அமைச்சர் மரிய வில்சன் உடனடி பதில்..!

    உயர் அதிகாரிகளான மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பின்னர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். மொத்தம் சுமார் பத்து காவல்துறையினர் இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பலமுறை ஜாமீன் கோரி நீதிமன்றங்களை அணுகினர். அவர்களது தரப்பில் உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி செயல்பட்டோம், அஜித்குமார் வலிப்பு காரணமாக இறந்தார், தாக்குதலால் அல்ல என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நீதிமன்றங்கள் இந்த வாதங்களை ஏற்கவில்லை. காவல் மரணம் என்பது மிகவும் கடுமையான குற்றம் என்றும், இதில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் அளித்தால் சாட்சிகளை பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டி மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    குறிப்பாக ஓட்டுநர் ராமச்சந்திரனின் ஜாமீன் மனுவும் சங்கர மணிகண்டனின் மனுவும் மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிபதி, இந்த குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, விசாரணை முடியும் வரை அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பல காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிபதி ஒருவர் விசாரணையின் போது, “உயர் அதிகாரி உத்தரவிட்டால் அடித்து கொலை செய்வீர்களா?” என்று கேள்வி எழுப்பி, போலீசாரின் செயலை மன்னிக்க முடியாத குற்றம் என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தார். விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. 

    இதையும் படிங்க: கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    மேலும் படிங்க
    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகம்
    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    உலகம்
    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    இந்தியா
    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share