• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சர்ச்சை! அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர் குழு பெயர் நீக்கப்பட்ட வழக்கில் அறநிலையத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 02 Sep 2026 17:30:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Orders Inclusion of Trustees' Names on Inscription for Madurai Meenakshi Amman Temple Kumbabishekam.

    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர் குழுவினரின் பெயர்களைப் புறக்கணித்துவிட்டு இணை ஆணையர் மட்டுமே தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பதற்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கோயில் என்பது மக்கள் அமைதியைத் தேடி வரும் இடம்; அங்கு இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்வது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல எனத் தீர்ப்பளித்துள்ளது.

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மகா குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அச்சிடப்பட்ட விழா அழைப்பிதழில், கோயிலின் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் முற்றிலுமாகத் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. 

    இதையடுத்து, திருக்கோயிலின் நிர்வாகம் மற்றும் குடமுழுக்குத் திருப்பணிகளில் அறங்காவலர்கள் தங்களது சட்டப்பூர்வக் கடமைகளை ஆற்றுவதிலிருந்து சட்டவிரோதமாகத் தலையிடுவதோ அல்லது தங்களை விலக்கி வைப்பதோ கூடாது என உத்தரவிடக் கோரி அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

    இதையும் படிங்க: தமிழுக்கு முக்கியத்துவம் தாங்க! மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக வழக்கில் விரைவில் முக்கிய தீர்ப்பு!

    இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று தீவிர விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக் குமார், அறநிலையத்துறையின் இந்தச் செயல் சட்டவிரோதமானது எனவும், இதற்கு முன் நடைபெற்ற அனைத்துக் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்களிலும் அறங்காவலர் குழுவின் பெயர்கள் இடம்பெற்றுள்ள மரபையே இங்கும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார். 

    அறங்காவலர் பெயர்

    இதற்குப் பதிலளித்த அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், ஏற்கனவே 3,000 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டதால், நீதிமன்றம் உத்தரவிட்டாலும் மீண்டும் புதிய அழைப்பிதழ்களை அச்சடித்துக் கொடுப்பது சாத்தியமற்ற சூழல் உள்ளது எனத் தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ அல்லது ஆணையரோ இதில் தலையிடவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையில், கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான செல்லத்துரை தன்னிச்சையாகச் செயல்பட்டு அறங்காவலர் குழுவின் பெயரை நீக்கிவிட்டு, தனது பெயரை மட்டுமே அழைப்பிதழில் பதிவு செய்துள்ளது அப்பட்டமான தவறு. அழைப்பிதழ்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுவிட்ட காரணத்தால், குடமுழுக்கு விழா முடிந்தவுடன் திருக்கோயிலில் முறைப்படி நிறுவப்படும் கல்வெட்டில் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்" என அதிரடியாக உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அறநிலையத்துறையின் போக்கைக் கண்டித்த நீதிபதி, திருக்கோயில் என்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மன அமைதியைத் தேடி வரக்கூடிய புனிதமான இடம். அத்தகைய இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்க செயல். மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல் புகுத்தப்படுவது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்கத்தக்கது அல்ல. இனிவரும் காலங்களில் வழிபாட்டுத் தலங்களில் எவ்வித அரசியல் நிகழ்வுகளும் இன்றி அனைத்தும் விதிமுறைகளின்படி மட்டுமே நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் காட்டமாகத் தெரிவித்தார். 

    அப்போது குறுக்கிட்ட கூடுதல் தலைமை வழக்கறிஞர், அறநிலையத்துறை குறித்த இந்தக் கருத்துகளைத் தீர்ப்பு உத்தரவில் பதிவு செய்ய வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தார். எனினும் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, நீங்கள் செய்தது முற்றிலும் தவறு; எனவே இந்த விமர்சனக் கருத்துகள் நீதிமன்ற உத்தரவில் கண்டிப்பாக இடம்பெறும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

    இதையும் படிங்க: வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    மேலும் படிங்க
    தேவதை பட்டம் வேண்டாம்; சம உரிமை கொடுங்கள்! சென்னை மாநகராட்சியில் 14வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தேவதை பட்டம் வேண்டாம்; சம உரிமை கொடுங்கள்! சென்னை மாநகராட்சியில் 14வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    வேளாங்கண்ணி பெருவிழா... நாகைக்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

    வேளாங்கண்ணி பெருவிழா... நாகைக்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வரி வசூல் சரிவு.! வருவாய் வளர்ச்சிக்கு என்ன வழி.? தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி..!!

    வரி வசூல் சரிவு.! வருவாய் வளர்ச்சிக்கு என்ன வழி.? தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி..!!

    தமிழ்நாடு
    கோவில்களில் செல்போன்களுக்கு தடை..! இதை செய்யலாமே.!!  மாற்று ஐடியா கொடுத்த வானதி சீனிவாசன்..!

    கோவில்களில் செல்போன்களுக்கு தடை..! இதை செய்யலாமே.!! மாற்று ஐடியா கொடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு
    சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!

    சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!

    தமிழ்நாடு
    கோவில்களில் செல்போன்களுக்கு ரூ. 5 கட்டணம் ஏன்..? வலுக்கும் கேள்வி... அமைச்சர்  ரமேஷ் விளக்கம்..!

    கோவில்களில் செல்போன்களுக்கு ரூ. 5 கட்டணம் ஏன்..? வலுக்கும் கேள்வி... அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share