மதுரை மாவட்டத்தில், இயற்கை சூழ்ந்த அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவில், தமிழ்நாட்டின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தக் கோவில் கள்ளழகர், ராக்காயி அம்மன், பழமுதிர்சோலை முருகன் என பல தெய்வங்களின் இருப்பிடமாக இருந்தாலும், கோவிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி தனித்துவமான முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சன்னதியின் கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும்.
அழகர் கோவிலின் முதன்மை நுழைவு வாயிலான ராஜகோபுரத்தின் கதவுகளில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி அமைந்துள்ளது. இந்தத் தெய்வம் உருவ வடிவம் இல்லாதவர்; மூடப்பட்ட கோபுரக் கதவுகளே அவராகக் கருதப்பட்டு வழிபடப்படுகின்றன. கருப்பண்ணசாமி, கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜப் பெருமாளின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
இதையும் படிங்க: தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்! போலீசார் கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்..!
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கும் இவர் குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் வணங்கப்படுகிறார். பக்தர்களின் நம்பிக்கையின்படி, கருப்பண்ணசாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதப்படுகிறார். அவரிடம் முறையிட்டால் நியாயம் கிடைக்கும், மனப்பயம் அகலும், செல்வங்கள் பெருகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

ஏனெனில் இந்தக் கதவுகள் சில நிமிடங்கள் மட்டுமே திறந்திருக்கும். இந்த அரிய தருணத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி, கதவுகளுக்கு சந்தனம் பூசப்பட்டு, நீண்ட பூமாலைகள் அணிவிக்கப்பட்டு, பெரிய அரிவாள்கள் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுவதைக் காண்கின்றனர்.
பதினெட்டு படிகளை 18 சித்தர்களாகக் கருதி, அவற்றுக்கு தீபாராதனை செய்யப்படுவது இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாகும். இந்த நிலையில் இந்த ஆண்டு கதவுகள் திறக்கப்படும் போது, பக்தர்கள் "கோவிந்தா" என்ற முழக்கத்துடன் பரவச நிலையில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போய் பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.
இதையும் படிங்க: குடும்பமே சேர்ந்து வரதட்சணை கொடுமை.. காட்டுமிராண்டி காவலரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!