தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் பாளையங்கோட்டை அலுவலகத்தில் மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எம்பி ஞான திரவியத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஞானதிரவியம், தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் ஆட்சி மன்ற உறுப்பினராகவும், தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் இருந்தார். ஆனால், அவர் இந்தப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு, புதிய நிர்வாகியாக அரசு வழக்கறிஞர் அருள்மாணிக்கம் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஞானதிரவியம் தனது ஆதரவாளர்களுடன் பள்ளி வளாகத்திற்குச் சென்று, புதிய நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபட்டார். இதன்போது, மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் தாக்கப்பட்டார். இதையடுத்து, ஞானதிரவியம் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கோரப்பட்டது.

இந்த நிலையில், ஞான திரவியம் மீதான வழக்கில் விசாரணையை விரைவுப்படுத்த கோரி மத போதகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, மத போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு சம்மன் வழங்காத விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது. சம்மன் அனுப்ப 6 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் எனக்காக துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், எம்பி எம்எல்ஏக்களுக்கு சம்மன் வழங்க இயலாவிட்டால் தனிப்பிரிவு அமைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. ஞான திரவியத்திற்கு சம்மன் வழங்கியது குறித்தும், அவர் மீதான நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து மனு மீதான விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் அஜித் குமார் கொலை வழக்கு விசாரணை.. 5 பேருக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!
இதையும் படிங்க: சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.. மதுரை ஆதீனத்திற்கு 2வது சான்ஸ் கொடுத்த போலீஸ்..!