மூத்த ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்ப்பு. வருவாய்த் துறை செயலாளர், உள்துறைச் செயலர், நில எடுப்பு ஆணையர் மத்திய மண்டல காவல்துறை தலைவர் IG, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலை துறையின் ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தபெற்ற 100 ஆண்டுகள் பழமையான கோயில் இது.
இதையும் படிங்க: மதுரை சிறுவன் மர்ம மரணத்தில் திடுக் திருப்பம்... காவல்துறை எடுத்த அதிரடி முடிவு... சிக்கப்போவது யார்?
கரூர் நகரின் மையப் பகுதியில் உள்ளது. இந்த கோயிலுக்கு செந்தமாக 3054ஏக்கர் நிலங்கள் இருந்தன இதில் தற்போது 150 ஏக்கர் தான் கண்டறியப்பட்டது அந்த நிலங்களும்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலங்களின் தற்போதைய மதிப்பு 200 கோடி ரூபாய்க்கு மேலானது. இந்த நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கபட்டு அதில் வணிக வளாகங்கள், குடியிருப்பு வீடுகள் என கட்டபட்டுள்ளன. கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அறநிலைய துறை மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சட்டவிரோதமாக கோயில் இடங்களை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2018 ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவிலின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். நோட்டீஸ் வழங்கி அவர்களது ஆவணங்களையும் சமர்ப்பிக்க போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். இதில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என்றும், உத்தரவுகளை மீறி சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலைத்துறையின் இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்பின்வரும் எதிர்மனுதாரர்கள் தாமாக முன்வந்து இணைக்கப்படுகிறார்கள் எனக்கூறிய நீதிபதிகள், K.S. பழனிசாமி, வருவாய்த் துறைசெயலாளர், A. கார்த்திக்,, உள்துறை, செயலாளர், V. ராஜாராமன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, செயலாளர், B. சந்திரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர், ராகேஷ் லக்கானி, நில நிர்வாக ஆணையர், T.G. வினய், இந்து சமய மற்றும் அறநிலையங்கள் ஆணையர். V. பாலகிருஷ்ணன், மத்திய மண்டலம், காவல் துறை தலைவர் திருச்சிராப்பள்ளி, C. முத்துக்குமரன், மாவட்ட ஆட்சியர், கரூர் உள்ளிட்டோரை இணைந்தனர்.
இதில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் வினை வரும் அஞ்சாம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்தும், இந்த வழக்கின் தற்போதைய நிலை என்பது குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!