மதுரை மாநகராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசாணை 62 (31)-ன் படி வழங்கிட வேண்டும், அவர்லேண்ட் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்,தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் அவமதிக்கும், பழிவாங்கும் அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி நிர்வாகத்தினர் நடத்திய 6 கட்ட பேச்சுவரத்தைக்கு பின்னர், 4 வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக துணை ஆணையர் அளித்தார். "தினக்கூலி அடிப்படையில் மாநகராட்சியில் தூய்மை பணியில் மேற்கொள்ளும் தூய்மை பணியாளருக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக 10 நாளில் நாட்களில் முடிவு செய்யப்படும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிவதற்காக மாதத்தின் இறுதி சனிக்கிழமை குழுவிருப்பு கூட்டம் நடத்தப்படும்,
பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த ஓட்டுனர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் சார்ந்து மாநகராட்சி நிர்வாகம் உரிய முடிவுகள் எடுக்காததால் வாக்குறுதிகளை ஏற்க மறுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 9 மணி வரை சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி அளிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
ஒத்துழைக்க மறுத்த பணியாளர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். பெண்களையும் இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் உள்ளேயே இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி பணியாளர்கள் கூச்சல் எழுப்பிய நிலையிலும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர். தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட பின்னர் அந்த இளைஞருக்கு உடல்நிலை சீராகி விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “ஏய்...வண்டிய நிறுத்துயா...!” - திடீரென கூட்டத்திற்குள் நுழைந்த ஆம்புலன்ஸால் டென்ஷன்... எச்சரித்த இபிஎஸ்...!
இதையும் படிங்க: அரசியல் களத்தையே அதிரவிட்ட தவெக... விஜய் மாஸ்டர் பிளான்... வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஏற்பாடு...!