சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாதர் சங்கத்தினர் குறித்து விமர்சித்து பேசியிருந்தார். அப்போது தனக்கு எதிராக போராடிய மாதர் சங்கம் ரிதன்யாவுக்கு குரல் கொடுக்காதது ஏன்? இதுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.
எல்லாம் பெண்ணிய உரிமை பேசுபவர்கள் எல்லாம் எங்கே?. எனக்கு எதிராக மாதர் சங்கம் எல்லாம் போய் மண்டியிட்டு மணு கொடுக்கும் முறையிடும் எதிர்த்து போராடும் எல்லாம் பண்ணும். இந்த ரிதன்யா என ஒரு தங்கை வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து இறந்திருக்கிறார். வாழ வேண்டிய ஒரு மலர். இதுக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கு. அதுக்காக பேச வேண்டிய மாதர் சங்கங்கள், மகளிர் அமைப்புகள், மனித உரிமை ஆர்வளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் எல்லாம் எங்க போய் படுத்திருக்கீங்க.
கொக்கைன்னு கஞ்சா போட்டு படுத்துட்டீங்களா?, இல்ல டாஸ்மார்க்ல சரக்கு வாங்கி குடிச்சிட்டு படுத்திட்டீங்களா? என்ன உங்க பிரச்சனை தேவைனா வாய் திறப்பீங்க தேவை இல்லைனா? வாய் திறக்க மாட்டீங்க? இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருட்டுப் பய கூட்டத்துக்கிட்ட நாட்ட கொடுத்தா திருடாம என்ன நடக்கும்? கொதித்தெழுந்த சீமான்..!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் வாளாண்டினா. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பொதுமேடைகளில் பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசி வருவதாகவும், மாதர் சங்கம் தொடர்பான சீமானின் பேச்சு மிகவும் பிற்போக்குத்தத்தனமானது என்றும் கூறியுள்ளார். அதோடு சீமான் ஒரு ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் அவரது மாமியாரிடம் 85 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அதை தனது மனைவி தனக்கு பெற்று தர வேண்டும் என்று பேசியதாகவும் இதனால் சீமான் மீதும் வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கம்பி கட்டுற கதையெக்கெல்லாம் சொல்லிகிட்டு.. திருச்சி சிவாவிற்கு சீமான் பதிலடி..!