மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள நண்பர்கள் வேட்டைக்கு சென்றபோது தவறுதலாக உடன் சென்ற நபரையே சுட்டுக்கொன்று மறைத்து நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் காடுகள் நிறைந்த பகுதிகள் அதிகம் உள்ளன பொதுவாக இங்கு கிராமங்களைச் சேர்ந்த நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்து பன்றி வேட்டை உள்ளிட்ட வேட்டை செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும்.
பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சாகர் அடல் வர்தா உள்ளிட்ட பல நண்பர்கள் ஒன்று கூடி வேட்டைக்கு சென்றுள்ளனர். 12 பேராக சென்று இந்த வேட்டை குழுவில் ஆளுக்கு ஒரு பகுதியாக பிரிந்து பன்றிகளை வேட்டையாட தொடங்கி இருக்கின்றனர் அனைவர் கைகளிலும் நாட்டுத் துப்பாக்கி கையில் ஏந்தி எப்படி பன்றிகளை வேட்டையாடி உள்ளனர்.

இதில் சாகர் அடல் என்பவர் தன்னுடைய துப்பாக்கியை தூக்கி எதிர் திசையில் சலசலப்பு கேட்ட இலக்கை நோக்கி சுட்டு இருக்கிறார் அங்கு தொடர்ந்து செடிகள் ஆடிக்கொண்டே இருந்ததால் பன்றி என நினைத்து பல ரவுண்டுகள் சுட்டுள்ளார். தொடர்ந்து பல துப்பாக்கி ரவைகள் காலியான பிறகு ஓடிச் சென்று பன்றியை தூக்கலாம் என நினைத்தவர்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
இதையும் படிங்க: தந்தையை அடித்தே கொன்ற அன்பு மகன்..! பரிதாபமாக உயிரிழந்த போலீஸ் எஸ்ஐ.. சென்னையில் பரபரப்பு
சுடப்பட்டது காட்டுப்பன்றி அல்ல தங்களோடு வந்த கிராமவாசிகளில் ஒருவரான வர்தா என்பவர் தான் செடிகளுக்கு பின்னால் பதுங்கி இருந்தபோது சுடப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளார் என்ற விஷயத்தை புரிந்து கொண்ட பிறகு கிராமவாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டது வெளியே தெரிந்து விட்டால் மிகப்பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்பதால் இறந்து போன வருதா என்பவருடைய உடலை சம்பவ இடத்திலேயே போட்டு இழை தலைகள் போட்டு மூடி மறைத்துவிட்டு ஏதும் நடக்காதது போல அனைவரும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். வேட்டைக்குச் சென்று நான்கு நாட்கள் ஆகியும் தனது கணவர் வீடு திரும்பாததால் இறந்து போன வருதாவின் மனைவி அமிர்தா தனது கணவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்து விசாரித்த உள்ளூர் காவல் துறையினர் வேட்டைக்குச் சென்ற ஒவ்வொருவரிடமும் போலீஸ் பாணியில் தனித்தனியாக விசாரித்ததன் பின் உண்மை தெரிய வந்திருக்கிறது உடன் சென்ற அனைவரும் முன்னுக்கு பின் முரணான செய்திகளை பயத்தோடு கூறியுள்ளனர்.
பின்னர் போலீசார் தீவிர விசாரணையில் பன்றி அணி இணைத்து தவறுதலாக சுட்டு விட்டோம் என அனைவரும் ஒப்புதல் வாக்குதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பின்னர் காவல் துறையினர் மற்றும் வருதாவின் மனைவியாகியோர் காட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனை செய்து கூறிய நபர்களிடம் ஒப்படைத்துள்ளனர். தவறுதலாக சுட்ட நபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காட்டுப்பன்றி என நினைத்து நண்பனையே தவறுதலாக சுட்டுக்கொன்ற சம்பவம் மகாராஷ்டிராவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மனிதநேயற்ற செயல்: இந்தியர்களுக்கு விலங்குபூட்டப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்