சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மீண்டும் அரிவால் வெட்டு சம்பவம் நிகழ்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சாலையோரம் பேசிக்கொண்டிருந்த இரு இளைஞர்களை, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி, அழகர் இவர்கள் இருவர்களும் நண்பர்கள் ஆவார்கள். ஜெயபாண்டி அப்பகுதியில் உள்ள கோழிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அழகர் அதற்கு அருகில் இருக்க ஓட்டலில் பணியாற்றி வருகிறார்.
இவங்க இருவரும் நேற்றிரவு வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது சியோன் நகரில் சாலையோரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வந்து ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளது. இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசார் அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் தொண்டர்; பாஜக விசுவாசி... பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பரபரப்பு பிண்ணணி...!!
நேற்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டியலின மக்கள் அதிகம் வசித்து வரும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்து 3 பைக்குகளில் புகுந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இடைக்காட்டூரில் கடந்த மார்ச் 3 ம் தேதி இரவு ராஜு என்பவர் ரோட்டோரம் நின்றுள்ளார். அந்த வழியாக புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் டூ வீலர்களில் வந்துள்ளனர். அவர்கள் ராஜூவிடம் தகராறு செய்ததையடுத்து பயந்து போன ராஜு அருகில் உள்ள தனது வீட்டிற்கு ஓடியுள்ளார்.
அவரை விரட்டி வந்த இளைஞர்கள் தட்டி கேட்ட அப்பகுதி பொதுமக்களை வெட்டியுள்ளனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று சோசியல் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடன் வாங்கித் தராத நபர் காரில் கடத்தல்... 2 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!