விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டது. இப்படம் அவரது திரைப்பயணத்தின் மைல்கல்லாக கருதப்படுகிறது. ஆனால், படத்தின் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படக்குழு கடந்த டிசம்பர் மாதமே படத்தை தணிக்கைக்கு சமர்ப்பித்தது. ஆனால், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்சார் போர்ட் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

நாளை படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இன்னும் தணிக்கை சான்று கிடைக்கவில்லை. இதனால் ஜனநாயகன் படம் சிக்கலில் உள்ளது. இதனடையை மண்டி இட வைக்க சென்சார் போர்டை மத்திய அரசு பயன்படுத்துவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: சிக்கலில் ஜனநாயகன்… இழுத்தடிக்கும் சென்சார்… ஜன.9 ஆம் தேதி தீர்ப்பு…!
ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரப் படங்களுக்கு எந்த ஆதரவும், நம்பகத்தன்மையும், மக்கள் ஆர்வமும் இல்லாதபோது, மோடி-ஷா ஆட்சி நம்பிக்கையுடன் அல்லாமல், கட்டுப்பாட்டுடன் பதிலளிக்கிறது என தெரிவித்தார். இப்போது திரைப்படத் துறை குறிவைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவு பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றும்
ஆனால் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கீழ், இந்த உரிமை சட்டத்தின் மூலம் அல்லாமல், பயத்தின் மூலம் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கான முன்னணி அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.
இப்போது தணிக்கை வாரியம்கூட சினிமா மற்றும் கருத்துக்களைக் கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டினார். கலை அதிகாரத்தின் முன் மண்டியிட நிர்பந்திக்கப்படும்போது ஜனநாயகம் உயிர்வாழ முடியாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகன் வழக்கில் உத்தரவு… என்னென்ன புகார்கள்?.. தணிக்கை குழுவுக்கு செக் வைத்த நீதிமன்றம்..!