விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அரசியல் சாயல் கொண்ட அதிரடி படமாக உருவாகியுள்ளது. விஜய் அரசியலுக்கு முழு நேரமாக மாற உள்ள நிலையில், இப்படம் அவரது திரைப்பயணத்தின் மைல்கல்லாக கருதப்படுகிறது.
ஆனால், படத்தின் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு கடந்த டிசம்பர் மாதமே படத்தை தணிக்கைக்கு சமர்ப்பித்தது. டிசம்பர் 19ஆம் தேதி தணிக்கை அதிகாரிகள் படத்தை பார்வையிட்டு, சில காட்சிகளில் மாற்றங்கள், வசனங்களை மியூட் செய்ய வேண்டும் உள்ளிட்ட சிறு திருத்தங்களை பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. படக்குழு அந்த மாற்றங்களை செய்து மீண்டும் சமர்ப்பித்த பிறகும், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்த தாமதம் தமிழகத்தில் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கை பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் சான்றிதழ் வரும் வரை புக்கிங்கை தொடங்க தயங்கி வருகின்றன. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்சார் போர்ட் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி இன்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். புகார் அளித்தவரே பேனலில் இருந்த ஒருவர் தான் என்றும் UA சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் என தணிக்கை வாரியம் கூறியது.
இதையும் படிங்க: பாதுகாப்பு முக்கியமில்லையா? புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்டுகள்... ஆட்சியருக்கு எச்சரிக்கை...!
எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது என்றும் அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல எனவும் நீதிபதி தெரிவித்தார். படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன் என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தது. இந்த நிலையில் ஜனநாயகம் படத்திற்கு சென்சார் சான்று வழங்கும் விவகாரத்தின் தீர்ப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகன் வழக்கில் உத்தரவு… என்னென்ன புகார்கள்?.. தணிக்கை குழுவுக்கு செக் வைத்த நீதிமன்றம்..!