சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றி கழகம் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறுவது பாஜகவின் கருத்து என்று கூறினார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக வைத்த அதே கோரிக்கை தான் அதிமுக தற்போது வைக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் தங்களது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படுத்தினார். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டும் என்பதை தங்கள் கோரிக்கை என்றும் கூறினார். தமிழக வெற்றி கழகம் தூய சக்தி என்ற விஜய்யின் பேச்சிற்கு கே.பி முனுசாமி பதில் அளித்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் தூய சத்தியா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் தெரிவித்தார். தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னரும் ஆண்டுதோறும் கடன் அதிகரித்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு பேசினார். உயர்த்தப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணத்தை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: செவிலியர்களை விடுவிக்கணும்... வாக்குறுதியை நிறைவேற்ற EPS வலியுறுத்தல்...!
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரலாம் என்றும் அறிவித்துள்ளார். இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர் பெற்று வந்த திமுகவுக்கு வாக்களித்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். இறுதியாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும், தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடும் இபிஎஸ்... விளாசிய முதல்வர்...!