தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், அதிமுகவின் உள் மோதல்களில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவராக, ஓ. பன்னீர்செல்வத்தின் நெருக்கடியான ஆதரவாளராகத் திகழ்ந்தவர் பி.எச். மனோஜ் பாண்டியன். அலங்குளம் தொகுதியைச் சேர்ந்த இந்த மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர், அதிமுகவின் உள் யுத்தங்களில் தீவிரமாக ஈடுபட்டு, கட்சியின் பிரிவினைக்குப் பிறகு ஓபிஎஸ் குழுவின் முக்கியத் தூணாக இருந்தார்.
மனோஜ் பாண்டியனின் அரசியல் பயணம், தென்னிந்தியாவின் அரசியல் அரங்கில் தீவிரமான போராட்டங்களுடன் தொடங்கியது. அலங்குளம் சட்டமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பதவியேற்றவர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் இருந்து அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

சிலர் திமுகவில் ஏற்கனவே இணைந்து விட்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளராக திகழ்ந்த மனோஜ் பாண்டியன் MLA திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்கள் திமுகவில் இணைந்து வருவது அதிமுகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இன்று மாலை 4 மணிக்கு தனது எஸ்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: கொம்பு முளைச்சிருக்கா? ஒருமையில் பேசி செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை...! 
திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்க கூடிய ஒரே இயக்கம் திமுக என கட்சியில் இணைந்த மனோஜ் பாண்டியன் புகழாரம் சூட்டியுள்ளார். பாஜகவின் கிளை கழகம் போல் அதிமுக செயல் பட்டு கொண்டிருப்பதாக மனோஜ் பாண்டியன் குமுறினார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தொடர்பாக யாரிடமும் கருத்து கேட்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: நாங்களும் சுப்ரீம் கோர்ட் போவோம்… திமுகவுக்கு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சவால்…!