மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழா: ஆளுநர் அர்லேகர் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குகிறார்திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 33-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குகிறார். இந்த ஆண்டு சுமார் 37,877 மாணவர்கள் பட்டங்கள் பெற உள்ளனர். இதில் 12,932 ஆண் மாணவர்களும் 24,945 பெண் மாணவர்களும் அடங்குவர்.
பல்கலைக்கழகத்தின் அபிஷேகபட்டி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் 871 மாணவர்கள் (175 ஆண்கள், 696 பெண்கள்) நேரில் பங்கேற்று ஆளுநர் அர்லேகர் கையால் பட்டங்களைப் பெறுகின்றனர். மீதமுள்ள 37,006 மாணவர்கள் அவதியாக பட்டங்கள் பெறுகின்றனர். இதில் 758 பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 113 பதக்கப் பெற்ற மாணவர்கள் ஆளுநர் கையால் பட்டம் பெறுகின்றனர்.
உயர் கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் விழாவில் பாராட்டுரை வழங்க இருந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிசை தொடர்பான சர்ச்சை காரணமாக விழாவைப் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்பவன் நெறிமுறையின்படி வந்தே மாதரம் முதலில் இடம்பெறவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இடம்பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. சில எம்.எல்.ஏக்களும் விழாவைப் புறக்கணித்தனர்.
இதையும் படிங்க: நீலகிரியை உலுக்கும் 'சூப்பர் எல் நினோ'..!! தேயிலை சாகுபடியில் கடும் பாதிப்பு!

இவை ஒரு பக்கம் இருக்க மற்றொரு சர்ச்சை ஏற்பட்டது. ஆளுநர் 113 மாணவர்களுக்கு மட்டுமே மேடையில் வைத்து பட்டங்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். மாணவர்களின் அதிருப்தியை தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு ஆளுநரே பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து இந்த 33 வது பட்டமளிப்பு விழாவில் பல மாணவர்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்று கூறி ஆத்திரமடைந்தனர். இதன் காரணமாக ஆளுநர் வரும் வழியை மறைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இருக்கை ஒதுக்காததால் ஆத்திரமடைந்து போராடினர். தொடர்ந்து பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் வரும் வழியை மறித்தவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு படை அதிகாரிகள் வெளியேற்றினர். இடப்பற்றாக்குறை காரணமாக வெளியில் உள்ள மாணவர்களும் விரைவில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால்...” - சி.எம். விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!