தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்பதாக கூறிய விஜய், பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் எதிரி என கூறினார்.
தவறு செய்தால், அதை அறிந்து செய்தால், அது கபட நாடகம். அது மு.க. ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும் விடமாட்டோம், என்று கூறி, முதலமைச்சரை அங்கிள் என்று குறிப்பிட்டார். மேலும், ஸ்டாலின் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள் என்று பேசியபோது, அரசின் நிர்வாகத்தை கேள்விக்குள்ளாக்கி, ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். இந்த வார்த்தைகள், அரசியல் மரியாதைக்கு அப்பாற்பட்டவை என்று கருதப்பட்டு, பலரது கவனத்தை ஈர்த்தன.
விஜய்யின் இந்தப் பேச்சுக்கு எதிராக பல தரப்பினரும் குரல் எழுப்பியுள்ளனர். முதன்மையாக, திமுகவைச் சேர்ந்தவர்கள் இதை முதலமைச்சரை அவமதிக்கும் செயல் என்று கண்டித்துள்ளனர்.

முதலமைச்சர் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மேடையில் அவரை மாமா என்று அழைப்பது பொருத்தமற்றது, என்று கூறி, விஜய்யை பூமர் என்று அழைத்தால் அவருக்கு வருத்தம் ஏற்படாதா என்று அண்ணாமலையும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: விஜய் துணியை உருவி ஓட விட்டு இருப்பாங்க! அநாகரிகமாக விமர்சித்த DMK எம்எல்ஏக்கள்…
இந்த நிலையில், அங்கிளை அங்கிள் தான் அழைப்பார்கள் என்றும் கிராண்ட்பா என்றால் அழைக்க முடியும் எனவும் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லையா? நயினார் நாகேந்திரன் நச் பதில்..!