சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.
இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கம்யூனிஸ்டுகளை குறிவைக்கும் இபிஎஸ்..! கொந்தளித்த முத்தரசன்..!

குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பத்தாவது நாளாக போராட்டம் நடத்தி வரும் சென்னை தூய்மை பணியாளர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் சந்திப்பு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பணியாளர்களுடன் அரசு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் விரைவில் தீர்வு கிடைக்கும் என கூறினார்.
பத்தாவது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: முதல்வருடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு... தமிழக அரசியலில் பரபரப்பு!