சென்னை மெரினா கடற்கரை என்பது சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளுகின்றனர். மேலும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மெரினா கடற்கரை விளங்குகிறது. நாள் முழுவதும் இங்கு மக்கள் நடமாட்டம் என்பது இருந்துக்கொண்டே இருக்கும். வார இறுதி நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இதுமட்டுமின்றி இது தளமாகவும் இருக்கிறது. இங்கு பல தலைவர்களின் நினைவிடங்களும் அமைந்து இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதற்காக நீச்சல் குளம், பூங்காக்கள், வாக்கிங் நடைபாதை, ராம்ப் வாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மெரினா கடற்கரையில் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மெரினாவில் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் பெசன்ட் நகரில் இருந்து மெரினா கடற்கரை வரை ரோப் கார் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இதை அடுத்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நடப்பது திமிர் பிடித்த ஆட்சி... தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்!!

இந்த நிலையில் சென்னை மெரினா ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு கடந்தாண்டு டெண்டர் கோரியது. வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், ஆலோசனை, விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றையும் மாநகராட்சி பெற்றது. அதற்குப் பிறகு மெரினா ரோப் கார் திட்டம் தொடர்பாக எந்த விதமான நகர்வுகளும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று சென்னை மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அப்போது 14வது வார்டு திமுக கவுன்சிலர் செம்மொழி சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ப்ரியா, சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்திற்கான சாத்திய கூறு குறித்த அறிக்கை தயாராகி வருவதாகவும், முழுமையான அறிக்கை கிடைத்ததும் ரோப் கார் திட்டம் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்த முறை மிஸ் ஆகாது..! சென்னைக்கு தனி பேரிடர் ஆணையம் அமைத்தது தமிழக அரசு..!