அதிமுக முன்னாள் கவுன்சிலர் வழிமறித்து காது கூசும் வார்த்தைகளால் வசைபாடியதோடு தனக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக சாத்தூர் எம்.எல்.ஏ. டி.எஸ்.பி. அலுவலகத்தில் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட விஜயகரிசல்குளம் கிராமத்தில் கிராம ஊராட்சி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்வதற்காக நேற்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் சிறப்பு அழைப்பாளராக சென்று பூமி பூஜை செய்து அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது விஜயகரிசல்குளத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம், ரகுராமன் காரை வலிமறித்து தகாத வார்த்தையால் திட்டி,தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறி வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ ரகுராமன் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவோடு இணைப்பு தான் இருக்கு.. பிணைப்பே இல்லங்க! அதிமுக கூட்டணி குறித்து திருமா நச் பதில்..!

அதன்படி காவல்துறையினர் அடைகலம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அடைகலத்தை விரைவில் கைது செய்ய கோரியும், அடைகலத்திற்கு ஆதரவாக செயல்படும் வெம்பக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் நம்பிராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாத்தூர் காவல்துறை துணை காண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாலை ரகுராமன் மற்றும் மதிமுக நிர்வாகிகளுடன் அலுலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்தும் மற்றும் அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதையடுத்து கலைந்து செல்வதாக கூறி எம்.எல்.ஏ ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுககாரங்களே போதைப் பொருள் விக்குறாங்க! காயத்ரி ரகுராம் பரபரப்பு பேட்டி..!