தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அளவில் அதிக நாய்கள் கடிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 நாய் கடி வழக்குகளும், அதில் 37 பேர் இறந்து உள்ளதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சுமார் 22 லட்சம் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தெருநாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மே தினம்..! செஞ்சட்டை அணிந்து செவ்வணக்கம் செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!

முன்னதாக நாடாளுமன்றத்திலும் தெருநாய்க்கடி பிரச்சனை தொடர்பாக திமுக எம்.பி பிரகாஷ் பேசி இருந்தார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து தெருநாய்க்கடி பிரச்சனை தொடர்பாக கோரிக்கை விடுத்தார். தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர திமுக எம்.பி-க்களை வலியுறுத்தியுளேன். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தெருநாய்களை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, கண்காணிப்பு, காப்பகத்துக்கு நாய்களை மாற்றுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்... என்ன சொன்னார் தெரியுமா?