காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் ஆறாவது முறையாக அதன் முழு 120 அடி எட்டி உள்ளது.
கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக சரியத் தொடங்கியது. மீண்டும் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக் கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து 120 அடியை எட்டி இருக்கிறது
மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி அணையின் வரலாற்றில் 44 வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பிறகு ஜூலை மாதம் 5 ஆம் தேதி இரண்டாவது முறையாக 120 அடியை எட்டியது. அதன் பிறகு மூன்றாவது முறையாக ஜூலை 20 ஆம் தேதி 120 எட்டியது அதன் பிறகு நான்காவது முறையாக ஜூலை 25 ஆம் தேதி 120 அடி எட்டியது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஐந்தாவது முறையாக 120 எட்டியது.
இதையும் படிங்க: மண்ணுக்குள் புதைத்த கிராமம்... ஒரே நாளில் 1000 பேர் பலி... ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்...!
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் இரண்டாம் தேதி ஆறாவது முறையாக 120 எட்டியுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 எட்டி இருப்பதால் இன்று காலை 8 மணிக்கு 16 கண் மதகு வழியாக உபரி நீரானது 12500 வெளியேற்றப்பட உள்ளது.
இதனால் காவேரி கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை யானது மாவட்ட நிர்வாகம் சார்பாக விடுக்கப்பட்டு வருகிறது. தங்கமாபுரிபட்டினம்,அண்ணா நகர், பெரியார் நகர், புது பாலம்,உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தங்களது உடைமைகளை பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் யாரும் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கும், கால்நடைகளை மேச்சலுக்கு விடுவது, புகைப்படம் எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் தீயணைப்பு துறை சார்பாக காவிரி கரையோரங்களில் தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேட்டூர் அணை ஆறாவது முறையாக அதன் முழு கொள்ள வான 120 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பயமா இருக்கா? அடுத்த வருஷம் இன்னம் பயங்கரமா இருக்கும்... திமுகவுக்கு சவால்விட்ட அண்ணாமலை...!