நெல்லை நேருஜி கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்துரையாட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பதற்காக வந்திருந்தார். அப்போது நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: துறை சார்ந்த ஆய்வு 23வது மாவட்டம் நெல்லையில் நடைபெற்று வருகிறது. தலைமை ஆசிரியர்களை சந்தித்து உரையாடி என்னென்ன தேவை என்பதை கேட்டறிவதற்காக வந்திருக்கிறேன்.
ஒவ்வொரு மாவட்டமும் நல்ல விதமாக செயல்பட்டு வருகிறார்கள். நல்ல முறையில் செயல்படும் தலைமை ஆசிரியர்களை சந்தித்து அவர்களிடம் சில கருத்துக்களை கேட்டறிந்து துறை சார்ந்த முன்னேற்றத்தை கொண்டு வருவதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த அரசாங்கமாக இருந்தாலும் பள்ளிக்கூடத்தை மூடாது. மூடுவது போல வரலாறே கிடையாது.
இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மாணவச் செல்வங்களின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் மேல் உள்ளது. எங்கெங்கெல்லாம் அதிகமாக மாணவர்களை சேர்த்து உள்ளோமோ அதை எல்லாம் நான் சொல்கிறேன்.
இதையும் படிங்க: டெல்லி மெட்ரோ ரயில் பயண கட்டணம் உயர்வு.. அப்போ சென்னையிலுமா..?? பயணிகள் ஷாக்..!!
5 வயதை கடந்து எங்கெல்லாம் குழந்தைகள் இருக்கிறார்களோ அதை எல்லாம் ஆய்வு செய்து அந்தக் குழந்தைகளை அருகில் இருக்கும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். 2015 - 2016 காலங்களில் பார்த்தோம் என்றால் பிறப்பு விகிதம் எல்லா ஊர்களிலும் குறைந்துள்ளது. இதுவும் ஒரு காரணமாக உள்ளது.
மற்றொன்று கொரோனா காலத்தில் இடம்பெயர்வு ஓரிடத்திலிருந்து வாழ்வாரத்திற்காக மற்றொன்றிடத்திற்கு சென்றிருக்கிறார்கள் இதுவும் ஒரு காரணம். எப்படி காரணம் இருந்தாலும் சரி அந்த சுற்று வட்டாரங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டிய பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் உடனடியாக சேர்க்க வேண்டிய வேலையை தான் பள்ளிக் கல்வித்துறை செய்து கொண்டிருக்கிறது.
அதேபோல 207 பள்ளிகளில் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஒவ்வொரு அதிகாரிகளும் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளோம்.நிலாவில் முதலில் கால் வைத்தது அனுமன் தான் என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு...
ஒரு ஒன்றிய அமைச்சர் கூறி இருக்கிறார் பி எம் சி பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் அட்ரஸ் பண்ணி கூறியிருக்கிறார். அது அவருடைய நம்பிக்கை சார்ந்து கூறியிருக்கிறார். அது அவர்களுடைய இஷ்டம் அது சார்ந்த கருத்துக்கள் கூற நான் விரும்பவில்லை. நாங்கள் அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழிகாட்டுதலோடு கல்வித்துறையை தமிழக முதலமைச்சர் வழிநடத்தி செல்கிறார்.
அறிவு சார்ந்த பாதையில் நாங்கள் செல்லுகிறோம் எங்களோடு யார் வேண்டுமானாலும் சேர்ந்து வந்தாலும் வரலாம் என்று கூறினார்.
இதையும் படிங்க: UNCLE -ஐ அங்கிள் தான் சொல்ல முடியும்... மன்சூர் அலிகானின் வைரல் வீடியோ..!