தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்படும் என்ற தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் ஏற்கனவே அறிவித்தபடி, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும். இதுவரை அந்த முடிவில்தான் இருக்கிறோம். முதல்வர் அலுவலகத்தில் இதற்காக தனித்துறையே இருக்கிறது.

அவர்கள் பள்ளி திறப்பு நேரத்தின்போது வெயிலின் தாக்கத்தை கணக்கிட்டு, அறிவுறுத்துவார்கள். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு இருக்கும். விழுப்புரம் செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் 100-க்கும் மேற்பட்டோர் வேதியியலில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ள விவகாரத்தில், மாணவ-மாணவிகள் 100 மதிப்பெண் எடுத்ததையும், அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் பாராட்டாமல், அதில் எதற்காக சந்தேகப்படுகிறீர்கள். அந்த குறிப்பிட்ட தேர்வு மையத்தில் கடந்த ஆண்டில் 91 முதல் 99 மதிப்பெண்களை 104 பேர் எடுத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மக்களே உஷார்!! 14 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.. உருவானது புதிய காற்றழுத்தம்!!

இந்த விவகாரத்தில் வினாத்தாள் கசிந்ததா? தேர்வு அறை மேற்பார்வையில் வேதியியல் பாடம் சார்ந்த ஆசிரியர்கள் பணியில் இருந்தார்களா? என்பது உள்ளிட்ட முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் அரசு நிதியுதவி மூலம் படிக்க வைக்கப்படுகிறார்கள்.

அதற்கான நிதியாக ரூ.617 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதுபற்றி தலைமை செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. இதனையடுத்து நமது மாநில பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரும் டெல்லி சென்று இருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்ததும், இந்த ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் செயல்படுத்தும் திட்டம் குறித்த அறிவிப்பை தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் ரெய்டு! விசாகனை மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்