சென்னை செல்வதற்காக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் மதுரை விமான நிலையம் வருகை தந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படுவதாகவும், அதன் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்மார்ட் மீட்டர்களில் பயன்படுத்தப்படும் மோடம் மற்றும் சிம் கார்டு தொழில்நுட்பம் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக சிக்னல் வசதி குறைவாக உள்ள இடங்களில் சரியாக செயல்படுமா என்பதையும் ஆய்வு செய்து வருவதாக கூறினார்.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி முதற்கட்டமாக அரசு கட்டிடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், சென்னை டி.நகரில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட் மீட்டர்களின் செயல்திறன் மற்றும் பிழை விகிதங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு..?? ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்தம்?
தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அமைப்புகள் நீண்டகாலத்திற்கு பயன்படுமா என்பதையும் அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் கூறினார். மேலும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து வெளியான சில செய்திகள் தவறானவை என்றும், அரசு தற்போது ஆய்வு மற்றும் மதிப்பீட்டு பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், இறுதி முடிவு முதலமைச்சரின் ஒப்புதலுடன் பின்னர் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். முதல் கட்டமாக அரசு கட்டிடங்களில் பயன்படுத்தி பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து பரிசினை தான் செய்யப்பட்டு வருகிறது.
"உள்ளாட்சித் தேர்தலில் தவெக இரண்டு மேயராவது வந்தால் மீசையை எடுத்துக் கொள்வேன் என ஆர் எஸ் பாரதி பேசியது குறித்த கேள்விக்கு?", மீசை எடுப்பதெல்லாம் பெரிய விஷயமா ஒரு நிமிடத்தில் எடுத்து விடலாம் . அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தவெக மிகப்பெரிய வெற்றி பெறும். அவர் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டால் எடுக்கட்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விசிக அனைவரும் சேர்ந்து அரசு அமைய வேண்டும் உருவாக்கப்பட்டது.
"சிங்கப்பெண் திட்டம் என்னானது? என்ற கேள்விக்கு, திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது அனைத்து வசதிகளும், நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்பதற்காக முதல்வர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!