தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், திமுக அரசைப் பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக அரசு திராவிட மாடல் என்ற பெயரில் ஊழல் செய்வதாகவும், மக்களை ஏமாற்றுவதாகவும், டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனையில் ₹1,000 கோடி முறைகேடு கண்டறியப்பட்டதாகவும், இது திமுகவின் ஊழல் இலக்கியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறி இருந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் திமுக அரசு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாக விஜய் விமர்சித்தார்.

நீட் தேர்வு விவகாரத்திலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த விஜய், நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தை 2026 தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம் என்று விஜய் கடுமையாக விமர்சித்து இருந்தார். திமுக அரசு, குடும்ப சுயநலத்திற்காக மத்திய பாஜக அரசிடம் சரணாகதி அடைந்து, தமிழகத்தின் மானத்தை அடகு வைத்ததாக விஜய் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: ‘ஓரணியில் தமிழ்நாடு' - Common DP வையுங்கள்... திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

இந்த நிலையில், போலீஸ் கஸ்டடியில் அஜித்குமார் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை கடுமையாக சாடி இருந்தார். இதற்கிடையில், ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விஜய் நடிப்பின் மீது நல்ல எண்ணம் தனக்கு உண்டு., ஆனால், அவர் அரசியலில் என்ன செய்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும் என கூறினார்.

அரசியல் சாதாரணமானது அல்ல, எம்ஜிஆர் நடிப்பில் இருந்து அரசியலுக்கு வந்தாலும், அவர் மக்கள் பணிகள் செய்து வந்ததாகவும், விஜயின் திடீர் அரசியல் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றும் கூறினார். மக்கள் சேவை தான் முக்கியம் என்றும் எதுவுமே செய்யாமல் குற்றச்சாட்டி வருவது சரியல்ல என்றும் அதனை ஆதரிப்பதே தவறு எனவும் கூறினார்.
இதையும் படிங்க: அப்பப்பா...!! சேகர்பாபுவை கொண்டாடி தீர்த்த முதல்வர்..! செயல்வீரர் என புகழாரம்..!