சென்னை ராஜா அண்ணாமலையபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலையத்துறை சார்பில் 32 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர்கள் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியும் அறநிலையத்துறை சாதனைகளை பட்டியலுக்கும் உரையாற்றினார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்வீரராக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2000க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் திமுக ஆட்சியில் 3,120 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார். அடியார்க்கு அடியார் போல் உழைத்துக் கொண்டிருக்கும் சேகர்பாபுவால் தான் பக்தர்கள் போற்றும் அரசாங்க திமுக உள்ளது என்றும் முதலமைச்சராக நான் அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது அறநிலையத்துறை நிகழ்ச்சி தான் என்று கூறினார்.
இதையும் படிங்க: ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

9800-க்கும் மேற்பட்ட திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து திமுக அரசு சாதனை படைத்து உள்ளதாகவும், இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான 7650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். 295 கோவில்களில் அன்னை தமிழில் வழிபாடு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம் என்றும் கூறிய முதல்வர் ஸ்டாலின், 2 பெண்கள் உட்பட 41 ஓதுவார்களுக்கு அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மூத்த குடிமக்களை கட்டணம் இல்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்றதாகவும் எல்லாரும் எல்லாம் என்ற மனம் கொண்டு திமுக அரசு செயல்பட்டு வருவதை சிலரால் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்தார்.

உண்மையான தொண்டர்கள் திமுகவின் ஆன்மீகத் தொண்டை பாராட்டுகிறார்கள் என்றும் பக்தி தான் அவர்கள் நோக்கம் என்றால் அரசியல் சாதனைகளை ஆன்மீக நிகழ்ச்சியில் பட்டியலிட்டு பாராட்டி இருக்க வேண்டும் ஆனால் அவர்களது நோக்கம் அதுவல்ல வன்மம் தான் என்று தெரிவித்தார். இன்னும் எங்களை கேலி செய்யுங்கள் கொச்சைப்படுத்துங்கள்., எங்களைப் பொருத்தவரை என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற உணர்வோடு இங்கு கூடி உள்ள மணமக்களை வாழ்த்துகிறேன் என பேசினார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, மாசுபிரமணியன், கே என் நேரு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் அடையாளம் "நான் முதல்வன்".. ஒரு அப்பாவாக ரொம்ப பெருமை! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!