தமிழ்நாட்டில் உயர்கல்வி முறை, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மூலம் பரவலாக வழங்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 56 பல்கலைக்கழகங்கள் உள்ளன, இதில் 24 அரசு பல்கலைக்கழகங்கள் உட்பட, 510-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.இவற்றில் 34 அரசு கல்லூரிகளாகும். சென்னையில் 1857இல் நிறுவப்பட்ட மெட்ராஸ் பல்கலைக்கழகம், இந்தியாவின் முதல் நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது.தமிழ்நாடு அரசு, உயர்கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றம், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் பணியாற்றி வருகின்றன.

இத்துறை, மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது, தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவது, மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை வளர்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பள்ளிக் கல்விக்கான மாநிலக் கொள்கை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனு கொடுக்கும் முகாமா? மக்களை முடக்கும் முயற்சியா? திமுக அரசை சாடிய அதிமுக
உயர்கல்விக்கான மாநில கல்வி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் மாநில கல்வி கொள்கை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். மாணவர்களின் நலன் காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: எல்லாம் அரசியல்... தட்டிவிடுங்க! வெளிநாட்டு பயணம் குறித்த விமர்சனத்திற்கு முதல்வர் பதிலடி