நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜநாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பகல்ஹாம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளித்து உள்ளனர்.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, அமைதிக்காக பாகிஸ்தான் கெஞ்சியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைதூக்கும் வாக்காளர் திருத்த விவகாரம்! பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. இரு அவைகளும் முடக்கம்..!
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இலக்கு நிர்ணயத்தை பாகிஸ்தானுக்கு தண்டனை வழங்கியதாகவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நாட்டில் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததாகவும் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கான ஆதரவை பாகிஸ்தான் முற்றிலும் நிறுத்தும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான களத்தில் போராடி வென்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாத கட்டமைப்பை 22 நிமிடங்களில் இந்தியா நொறுக்கியதாக தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர், 2014 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
அமைதிக்காக பாகிஸ்தான் கெஞ்சியதன் காரணமாகவே தாக்குதலை இந்தியா நிறுத்தியதாகவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக யாரும் மத்தியஸ்தராக செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு தானே காரணம் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்திற்கு இடைத்தரகராக யாரும் செயல்படவில்லை என்றும் அமைதி வேண்டுமென பாகிஸ்தான் கேட்டுக்கொண்டு தான் பின்னரே போர் நிறுத்தம் செய்ததாகவும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இதையும் படிங்க: பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் கமல்..! ஒலிக்கப்போகும் கணீர் கன்னிப்பேச்சு..!!