சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் போய் பொறுத்தவரை வெறும் சளி காய்ச்சல் பார்க்க மருத்துவ முகாமாக மட்டுமில்லாமல் முழு உடல் பரிசோதனை முகமாக நடைபெற்று வருகிறது. 21 வது முறையாக இன்று தமிழக முழுவதும் நலம்பாக்கம் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறு இயல் மற்றும் மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம் என அனைத்து வகை நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகிறது.
இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது தனியார் மருத்துவமனைகளில் இதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் அரசு மருத்துவமனைகளிலும் 3000 ரூபாய் வரை செலவாகும் ஆனால் இந்த முகமூலம் முழுமையாக இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. நோய் கண்டறியப்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் 65 பேர் உயிரிழப்பு... எடப்பாடி பழனிச்சாமியை எகிறி அடித்த மா.சு...!
மாற்றுத்திறனாளிகளுக்கான ஊனத்திற்கு ஏற்ப சதவீத சான்றிதழும் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் வரை 41 ஆயிரத்து 324 புதிய மாற்றத்திறன் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 663 முகாம்கள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். சேலத்தில் மட்டும் இன்று மூன்று இடங்களில் முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 65 ஆயிரம் மேற்பட்டோர் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.
நாய்களைப் பொறுத்தவரை உலகம் முழுவதும் உள்ளது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. நாய்களை கொல்லக்கூடாது என சமூக நல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே நாய்கள் பெருக்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல எலிகள் பெருக்கத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 8,713 சுகாதார நிலையங்கள், 2,236 துணை சுகாதார நிலையங்களில் நாய் கடிக்கான மருந்துகளும், பாம்பு கடிக்கான மருந்துகள் இருக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுசு கண்ணா புதுசு... சிலிண்டர், பால் பாக்கெட்டுகளில் SIR விழிப்புணர்வு வாசம்..!