கொடைக்கானலில் அண்ணா பிறந்தநாள்க்கு மாலை அணிவிக்க நீண்ட நேரமாக காத்திருந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், அண்ணா பூங்கா திறக்கப்படாததால் நிர்வாகிகளை கடிந்து கொண்டார் பூட்டை உடைக்க முயன்ற ஊழியரிடம் பூட்டை உடைக்க வேண்டாம் நான் திண்டுக்கல் அல்லது மதுரையில் மாலை அணிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்த சில நிமிடங்களில் அண்ணா பூங்காத்திறக்கப்பட்டு மாலை அணிவித்தார். ரோப் கார் திட்டம் இந்த அரசில் கண்டிப்பாக கொடைக்கானலுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் என்றார்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுக்க அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரக்கூடிய நிலையில் கொடைக்கானலில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கொடைக்கானலில் உள்ள அண்ணா பூங்காவிற்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தார்.
அப்போது எந்த ஒரு முன்னேற்பாடுகளும் இல்லாததால் நீண்ட நேரமாக அண்ணா பூங்காவிற்கு வெளியே காத்திருந்தார் அண்ணா பூங்காவும் பூட்டு போட்டு இருந்தது. இதனை முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகிகளை கடிந்து கொண்ட நிலையில் சில நிமிடங்களுக்கு பிறகு ஊழியர் ஒருவர் பூட்டை உடைக்க முயன்றார். அப்போது பூட்டை உடைக்க வேண்டாம் நான் திண்டுக்கல் அல்லது மதுரையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து செல்கிறேன் என தெரிவித்த நிலையில் சில நேரங்களிலேயே பூட்டு திறக்கப்பட்டது.
இதையும் படிங்க: 12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!
பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், கொடைக்கானலில் சாலை வசதி மிகவும் மோசமாக இருப்பதாகவும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கொடைக்கானல் குறித்து தனியாக தமிழக முதல்வர் விஜய் இடம் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கொடைக்கானலில் கனரக வானங்கள் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் கொடைக்கானலில் நீண்ட கால கனவாக உள்ள அரோகார் திட்டம் விரைவில் செயல்முறை படுத்தப்படும் என மறிய வில்சன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “AI மனித இனத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” - கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி விலகல்!