சென்னையில் 82 புதிய மின்தடை நீக்க மையங்களின் செயல்பாட்டை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். மேலும் 82 வாகனங்களின் செயல்பாட்டை கொடிய செய்து தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மழை காலங்களை எதிர்கொள்ள முழு வீச்சில் மின்சாரத்துறை தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் நாற்பதாயிரம் மெகா வாட்டிற்கும் அதிகமாக மின் தட்டுப்பாடு இருப்பதாக கூறினார். கேஸ் மின்சாரத்தை பெரும்பாலான மாநிலங்கள் யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கும் அதிகமாக கொடுத்து கொள்முதல் செய்வதாக குறிப்பிட்டார். மத்திய அரசு கணிக்க தவறியதால் தான் மின்சாரத்திற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்தார்.

செஞ்சி ஆலம்பூண்டி சிறுமி மாயம் விவகாரத்தில் எல்லா கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தவறு நடந்தால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் முகப்பேரில் ஒரு சிறுமிக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் என்றும் நம் வீட்டு குழந்தை மாயமானது சோகமான விஷயம்., பத்து நாட்களைக் கடந்து போலீசார் தீவிரமாக தேடி தான் வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். நேருவின் தம்பி கொலை வழக்கையே திமுக ஆட்சியில் தீர்க்க முடியவில்லை என்றும் சிறுமி மாயத்தை அவர்கள் கேட்பதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ரூ.634 கோடி லஞ்சப் புகார்..! கே. என். நேரு மனு தள்ளுபடி..! புதிய நெருக்கடி..!!
திமுக ஆட்சியில் முகப்பேர் சிறுமி வழக்கில் ஹைகோர்ட் தலையிட்டு தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது என்றும் குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து பணம் பார்த்து வசூலித்தது திமுக ஆட்சியில் தான் எனவும் குற்றம் சாட்டினார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றும் திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவரு மட்டும் எப்படி ஜெயிச்சாராம்? தவெக விஜய் உடன் தன்னை ஒப்பிடும் உதயநிதி?! ஸ்டாலினிடம் பறக்குது புகார்!!