அரசு திட்டத்தில் முதலமைச்சர் பெயர் வைக்க கூடாது என்பதை வலியுறுத்தி அதிமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பான இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து திமுக தரப்பில் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன் சிவி சண்முகத்துக்கு 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசு திட்டத்திற்கு முதலமைச்சர் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடக் கடவுளே! எங்க இருக்கு சட்டம் ஒழுங்கு? பதில் சொல்லுங்க பொம்மை முதல்வரே! சாடிய இபிஎஸ்..!
அதிமுக ஆட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி படம் போடப்பட்டது என்றும் மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தார்கள் என்றும் அந்த சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மீண்டும் நாங்கள் அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்த போது ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியதாகவும் அதற்கு சேர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் கலைஞருக்காக அவர்களது தலைவர் ஜெயலலிதாவிற்கும் சேர்த்து அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற வாதாடி பெற்று இருக்க கூடிய இயக்கம் தான் திமுக எனவும் தெரிவித்தார்.
தங்களுக்கு கட்சி வேறுபாடு கிடையாது என்று தெரிவித்த அமைச்சர் ரகுபதி, எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களுடைய முதலமைச்சர் பெயரை சுட்ட வேண்டுமோ அந்த பெயரை சூட்ட கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

அதையெல்லாம் விமர்சித்த சீவி சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது வரவேற்கத்தக்கது என்றும் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் மோடியால் வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்ததா என்ற கேள்வியையும் முன் வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழ்நாடு இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டி உள்ளதாகவும் இது முழுக்க முழுக்க தமிழக அரசின் உழைப்பு எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்திருக்கும் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து எந்த சான்றிதழையும் எதிர்பார்க்கவில்லை என்றும் மக்களின் சான்று தங்களுக்கு போதும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்டா, தென் மாவட்டங்களில் டப்பா டான்ஸ் ஆடப்போகுது... அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஓபிஎஸால் காத்திருக்கும் பேராபத்து...!