கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தென்மேற்கு பருவ மழை குறைவாக தான் உள்ளது என்றும் 200 நெல் மூட்டைகள் நனையவில்லை என்றும் இருவது மூட்டைகள் தான் நனைந்தன எனவும் தெரிவித்தார். ஆட்டுக்கு வால் தேவையில்லை என்பது போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என கிண்டல் செய்தார்கள் என்றும் கூறினார். 21 ஆண்டுகளில் 7 முறைதான் ஜூன் 12இல் மேட்டூர் திறக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனை என்பது நேர்மையான ஆட்சியை வழங்குவது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பேரவைக்கு வெளியே சென்று எதிர்க்கட்சியினர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றனர் என்றும் பேரவைக்கு உள்ளே இருந்து எதிர்க்கட்சிகள் கேட்டிருந்தால் முதலமைச்சர் பதில் சொல்லியிருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுகவை மக்கள் ஏற்காததால்தான் அக்கட்சி தலைமை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது என்று தெரிவித்தார். குழந்தைகளும் பெற்றோர்களை தவெகவுக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டனர் என்று கூறியுள்ளார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நெறியில் இது தொடர்பான கேள்விக்கு பதில் கொடுத்தார்.
இதையும் படிங்க: தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசின் வஞ்சனை..! நயினார் கண்டனம்.!
குடியரசுத் தலைவர் வந்தபோது 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது என்றார். தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சி நடைபெறுகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து தமிழக அரசின் மீது தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், நயினார் ஒரு காமெடி பீஸ் என பதில் கொடுத்தார்.
இதையும் படிங்க: தூசு தட்டி எடுக்கப்பட்ட செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கு... காவல்துறையிடம் நீதிமன்றம் கேட்ட சுளீர் கேள்வி...!