மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் சோக சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. 1 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் லேசான காய்ச்சல், இருமல் காரணமாக உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றனர். அப்போது அளிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் மற்றும் நெக்ஸ்ட்ரோ-டிஎஸ் என்ற இருமல் மருந்துகளை உட்கொண்ட பிறகு, நிலைமை திடீரென மோசமடைந்தது.
சிறுநீர் வெளியேறாமை, சிறுநீரகத் தொற்று, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றின. பவர் அருகிலுள்ள மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 குழந்தைகள் டயலிசிஸ் சிகிச்சை பெற்றபோதிலும் உயிரிழந்தனர். இப்படி இதுவரை 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அணுகுமுறை குழுக்கள் சிந்த்வாராவில் விசாரணை நடத்தி, மருந்து மாத்திரைகளை சேகரித்துள்ளன. மேலும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகியவை இந்த மருந்துகளின் தரத்தை சோதித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு எதுக்கு நோபல் பரிசு!! அதிபர் ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

இந்த நிலையில், தமிழகத்தில் 397 நிறுவனங்களிடமிருந்து மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12 ஆயிரம் முதல் 15,000 கோடி வரை தமிழகத்தில் இருந்து மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மருந்து தர கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார் .
ஆனால், மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ரத்த தானம் செய்வதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்றும் தமிழ்நாட்டில் 101 அரசு ரத்ததான மையங்கள், 252 தனியார் ரத்ததான மையங்கள் செயல்படுகின்றன எனவும் கூறினார். மேலும், ரத்தம் இருப்பு குறித்து தெரிந்து கொள்ள ஏதுவாக இணையதளம் செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கண்காணிப்பை தீவிரப்படுத்துங்க! காஷ்மீருக்கு பறந்த உத்தரவு! களமிறங்கிய அமித்ஷா!