அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு செய்யும் பிரத்தியேக திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோயில்களுக்கு கும்பாபிஷேகம், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்பது, தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குவது, அன்னதானத் திட்டம் விரிவாக்கம், ஒரு கால பூஜை திட்டம் என பல்வேறு திட்டங்கள் அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது வந்த வரிசையில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டமானது இன்று தொடங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடமா? உண்மை நிலவரத்தை சொன்ன TN FACT CHECK...!
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்து சமய அறநிலையத்துறையின் நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பல்வேறு பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, மணி விழா கண்ட (பீம ரத சாந்தி ) 70 வயது பூா்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு கொண்ட 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சாா்பில் சிறப்பு செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சென்னை இணை ஆணையா் மண்டலங்களை சோ்ந்த 70 வயது பூா்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (நவ.10) தொடங்கி வைக்கிறாா்.
இந்த நிகழ்வில் தம்பதிகளுக்கு ரூ. 2,500 மதிப்பிலான வேஷ்டி, சட்டை, புடவை மற்றும் மங்கலப் பொருள்கள் ஆகியவை வழங்கப்படும். தமிழக முழுவதும் இத்திட்டத்தின் கீழ் மூத்த தம்பதியினா் சிறப்பு செய்யப்படுகின்றனா்.
இந்த நிகழ்வைத் தொடா்ந்து, திருவல்லிக்கேணி, நல்லத்தம்பி தெருவில் ரூ. 2.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அறநிலையத் துறை அதிகாரிகள் குடியிருப்பு, பாா்த்தசாரதி தெருவில் ரூ. 1.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளா் குடியிருப்பு ஆகியவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறாா் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மலேசிய-தாய்லாந்து எல்லையில் சோகம்..!! கடலில் மூழ்கிய கப்பல்..!! பயணிகளின் கதி..??