கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மத்திய அரசால் கடந்த 25ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 100 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான அட்டை வைத்திருப்பவர்கள் வேலை தேவைப்பட்டால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கும். கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க உதவி செய்கிறது.
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்குவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள் என்று கூறினார்.

100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்., இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது என்று எச்சரித்தார். வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வஞ்சிக்கப்படும் விவசாயிகள்..! நாடு போற்றும் நல்லாட்சி? நல்லாருக்கு லட்சணம்.. நயினார் விமர்சனம்...!
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை மத்திய பாஜக அரசு ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது என்றும் Three Farm Laws, Caste Census போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல இந்த திட்டத்திலும், சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள் என கூறினார். எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ரூ. 1 கோடி பரிசு... கேரம் சாம்பியன் கீர்த்தனாவுக்கு மகுடம் சூட்டிய தமிழக அரசு...!