தென்காசி மாவட்டம் அனந்தபுரம் அரசு நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது, விரக்தியின் உச்சியில் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். திமுகவு அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை என்றும் அதனால் நாள்தோறும் அவதூறு பரப்புகின்றனர் என்றார். எடப்பாடி பழனிச்சாமியிடம் பொய்யையும் துரோகத்தையும் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் கூறினார்.
மக்களை மகிழ்விக்கவும், மக்களை காக்கவுமே இந்த ஆட்சி நடந்து வருகிறது என்றும் திமுக ஆட்சியில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார். முந்தைய அதிமுக ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 22 லட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஒரு கோடியே 70 லட்சத்து 45 ஆயிரத்து 545 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

திமுக ஆட்சியில் பாசன நிலத்தின் பரப்பளவு அதிகரித்து கொள்முதலும் அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியை போல் இல்லாமல் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதலில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராவண தேசத்து மாமன்னனாக மாறிய இபிஎஸ்... நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறும் சிவ பக்தர்கள்...!
மக்களைக் காக்க திமுக அரசிற்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை என்றும் பேரிடர் நிதியை கூட மத்திய அரசு தரவில்லை எனவும் மத்திய பாஜக அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமை பறிக்க முயற்சிக்கின்றனர் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் வாக்குகளை பறிக்க பாஜக சதி செய்கிறது என்று குற்றம்சாட்டினார். ஜனநாயகத்தின் அடித்தலமே வாக்குரிமை தான் என்றும் அதனை எந்நாளும் விட்டுத்தர மாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கண்ணகி நகரை உலக அரங்குக்கு கொண்டு போகணும்! தங்கமகள் கார்த்திகாவுக்கு இபிஎஸ் நேரில் வாழ்த்து...!