தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பெரிய நகரங்களான கோவை மற்றும் மதுரை, வேகமாக வளரும் தொழில் மற்றும் சுற்றுலா மையங்களாக உருமாற்றம் காண்கின்றன. கோவையில் தினசரி லட்சக்கணக்கான பணியாளர்கள் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை போன்ற பரபரப்பான பாதைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். அதேபோல், மதுரையில் திருமங்கலம் முதல் ஓதக்கடை வரையிலான பகுதிகள், மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப்பகுதி மற்றும் பெரியார் பஸ் டெர்மினஸ் போன்றவை போக்குவரத்து அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, 2010-ஆம் ஆண்டு மத்திய அரசு 16 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை அறிவித்தபோது, கோவை மற்றும் மதுரை இதில் சேர்க்கப்பட்டன. 2011-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இந்தத் திட்டங்கள் முறையாக அறிவிக்கப்பட்டன.

தற்போது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்தது. இதனை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. மதிய பாஜக அரசுக்கு எதிராக கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வஞ்சிப்பதே வேலை... மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து மத்திய அரசு... திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்...!
கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு, மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி, நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு, தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு என அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டியலில் இருந்து நீக்கியது விதிப்படி தவறு.. மமக கட்சி தொடர்ந்த வழக்கு... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!