பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா என்றும் மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறதா என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை முன் வைத்திருந்தார்.

இந்த பதிவை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி தனது கருத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது என்றும் ஒவ்வொன்றும் அதற்கேற்ற உரிய குரலுடன் கூடிய மாநிலங்களின் ஒன்றியம் எனவும் கூறினார். மோடி அரசு ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்தி மாநில அரசுகளின் குரல்வளையை நசுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தடுக்கிறது எனவும் இது கூட்டாட்சியின் மீதான மத்திய அரசின் ஆபத்தான தாக்குதலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: வீர் பூமியில் ராகுல்காந்தி..! தந்தை ராஜீவ் காந்திக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி..!

இந்த நிலையில், ராகுல் காந்தியின் கருத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அன்புள்ள சகோதரரே, மாநிலங்களின் உரிமைகளையும் இந்தியாவின் கூட்டாட்சி உணர்வையும் பாதுகாப்பதில் உங்கள் குரலை நான் பாராட்டுகிறேன் என்று புகழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெய்சங்கரின் மவுனம் மிக மோசமானது.. ஓபனாக விமர்சித்த ராகுல் காந்தி!!