தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு ஒரு வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது என்றாலும், இதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தந்தை பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வு, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் உலகளாவிய முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும், அவரது சிந்தனைகளை சர்வதேச அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின், தனது உரையில், பெரியாரின் பேரனாக இந்த உருவப்படத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைவதாகவும், பெரியாரின் கொள்கைகள் உலகளாவிய மனிதாபிமானத்திற்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அல்ல என்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்லூரியில் அவர்கள் உருவப் படத்தை திறந்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இன்னைக்கு ஆசிரியர் தினம்! அந்த வாக்குறுதி ஞாபகம் இருக்கா முதல்வரே? வாட்டி எடுத்த நயினார்
இந்த மண்டபம் திமுக நிர்வாகிகளால் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் இது எந்த கல்வி நடவடிக்கைகள் அல்லது நிறுவனங்களுடனும் இணைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் பெரியாரை தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவராக சித்தரிக்க முடியாது என்றும் திமுக தோற்கடிக்கப்பட வேண்டிய நேரம் இது எனவும் கூறினார். இல்லையெனில் அவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக தமிழ் பெயரையும் பெருமையும் தவறாக பயன்படுத்துவார்கள் என்றும் இது மலிவான அரசியல் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்... ரூ.13,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர் பெருமிதம்..!