2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாது வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்.
மொத்தம் நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ய அவகாசம் இருப்பதால் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுகவை பொருத்தவரை மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து முறைப்படி தொடங்கினார்.

இது திமுகவுக்கு மட்டுமல்லாமல், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்பட்டது. பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். திமுகவிற்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: PTR-க்கு டெல்லியில் கூட ரசிகர்கள்...! சம்மந்தமே இல்லாத வேட்பாளர் அவரு... சுந்தர் சி-யை விமர்சித்த கனிமொழி..!!
இந்த நிலையில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். நெல்லை, ராதாபுரம், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய உள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!