காஷ்மீரின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் மீதான பதிலடி தாக்குதலை இந்தியா நிகழ்த்தி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஒன்பது நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் இந்திய அரசுடனும் இந்திய ராணுவத்துடன் துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வர்ணாசிரமத்தை உயர்த்தி பிடிக்கும் தேசிய கல்வி கொள்கை.. அமித் ஷாவுக்கு அன்பில் மகேஸ் பதிலடி.!

இந்த நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் என்று ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அப்பாடா..! சொத்து வரி உயர்வு என்பது வதந்தி.. தமிழக அரசு அறிவிப்பால் மக்கள் நிம்மதி..!