தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96 சதவீதத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், 2021-22 கல்வியாண்டில் ஆண்டில் 84% ஆக இருந்த தேர்ச்சி சதவீதம், 2024-25ல் 96% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2021-22ல், 78% ஆக இருந்த தேர்ச்சி சதவீதம், 2023-24ல் 92% ஆக அதிகரித்துள்ளது.

இதனை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட்டுக்கே சவாலா..? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருவதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட மாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு..!