திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் அனைவரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்ததாக அவர் தெரிவித்தார். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார் என்று கூறினார். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதும் “நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!
இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான் தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம் என்றும், இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார் என்று அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது என்றும், முடியுமா முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!