தமிழக மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக மற்றும் திமுக உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 2026 சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு அனைத்து கட்சிகளும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்கும் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார். மறுபக்கம் திமுகவினர் நான்காண்டுகளில் தங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பரப்புரை நடத்தி வருகின்றனர்.
'ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், மக்களை ஒருங்கிணைத்து அநீதிகளுக்கு எதிராக ஒரணியில் திரட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் முன்னெடுப்பு. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களை சாதி, மதம், அரசியல் கடந்து ஒருங்கிணைக்கவும் இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், திமுகவின் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்துவதோடு, மக்களிடையே திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைப்பதும் இதன் நோக்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 3 ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து இயக்கத்தை தொடங்கினார். இதன் நீட்சியாக, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, அரசின் நலத்திட்டங்களை விளக்கி, பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை சென்றுள்ளார். இந்த நிலையில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று பரப்பரை செய்தார். மக்களை நேரடியாக சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமது கையால் படிப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்.
இதையும் படிங்க: ஊர் சேர்ந்தா தான் தேர் இழுக்க முடியும்! ஒற்றுமையோடு செயல்பட திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை!
இதையும் படிங்க: களத்தில் முதல்வர்... வீடுவீடாகச் சென்று பிரச்சாரம்..! பரபரக்கும் திருவாரூர்..!